cover-baby-dna

நேரம் காலை 5:30 மணி.
இருப்பினும், சூரியன் அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட்டதாய் தெரியவில்லை. சிறிது நேரத்தில் பூமியில் உள்ளோரை துயில் எழ செய்யவேண்டுமே என்ற கவலை சிறிதுமின்றி, இன்னும் நன்றாக உறங்கி கொண்டிருந்தது.
பணிமனையின் உள்ளே அணைத்து இரயில்களும் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு இரயில் மட்டும், தனியே அலங்காரம் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
யாரும் அறியாவண்ணம் உள்ளே நுழைந்த அந்த உருவம், மெல்ல நோட்டமிட்டு கொண்டே அங்கே அலங்காரம் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் நோக்கி நகர்ந்தது. அவனது இடது கையில் ஒரு சிறிய பெட்டி இருந்தது.
அவனது வலது கை பான்ட் பாக்கெட்டில் இருந்த கை குட்டை எடுத்து, வேர்த்திருந்த அவனது நெற்றியை துடைத்தது.
நீல சட்டைகாரன் தன்னுடன் கொண்டுவந்த பெட்டியை திறந்தான்.
உள்ளே, ஒரு சிறிய பார்சல் மிகுந்த கலைநயத்துடன் இருந்தது. அதை திறந்தால் உள்ளே ஒரு டிஜிட்டல் கடிகாரம் போலே ஒன்று நான்கு எட்டு இருந்தது. இரண்டிற்கும் நடுவே ஒரு “:” இருந்தது.
கூடவே சில பல வர்ணத்தில் கம்பி அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடி கொண்டிருந்தது. பிரிந்து இருந்த சிலவற்றை ஒன்றாக இணைத்து, ஏதோ அவன் செய்வதை ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டிருந்தது அந்த உருவம்.
MG ரோடு சென்றடைய சரியாக, பத்து மணி ஆகும்.
ஆம், சரியாக பத்து மணிக்கு நான் அலாரம் அடிப்பேன் என்பது போலே செல்லமாய் சொன்னது அந்த கடிகாரம். அது அலாரமா இல்லை அலறும் குரலா என்று இன்னும் நான்கு மணி நேரத்தில் தெரிந்து விடும்…