cover-pic

சூரியன் மெல்ல கண்ணை கூச ஆரம்பிக்கவே, தூக்கம் களைந்து எழுந்து தன் கை கடிகாரம் பார்த்தான் அவன் . சரியா மணி காலை ஏழு.
இன்னும் சரியா மூணு மணி நேரம் இருக்கு. இந்த காரியம் மட்டும் நல்ல படியா முடிஞ்சா, முடியும், பணத்த வாங்கிட்டு வெளி நாட்டுக்கு பறக்க வேண்டியது தான். அப்புறம் இந்த கேஸ் எல்லாம் ஓய்ஞ்சி போனதும், பணம் காலி ஆனதும், அடுத்த குறி பார்க்க வேண்டியது தான்.
தன்னிடம் இருந்த செல் போன் எடுத்து அதை silence mode-ல் வைத்தான். இது வேற நேரம் கெட்ட நேரத்தில் கத்தி வைக்க போகுதே என்ற பயம் தான். பிறகு பரணிக்கு ஒரு போன் போட்டு அவனிடம் மீண்டும் ஒரு வாட்டி பிளான் பத்தி பேசினான்.
நானூறு கிலோமீட்டர் தள்ளி ஒரு உருவம் தன் பக்கத்தில் உள்ள போனையும் டிவியும் பார்த்து கொண்டிருந்தது….